5/27/2011

நான், இங்கு



ஆக்கம் அளவு இறுதி இல்லாது காரணங்கள் அறியாது திரிந்த படியே இருக்கும் கொடூர பைத்தியத்தின் மனநிலையுடன் புல்லாகி, பூண்டாய், பூவாகி, மரமாகிப் பல் விருகமாகி, பாம்பாகி பறவையாய், கொரங்காகி மனிதனான
நான், யார்?
நாம் யார்?
நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
நாம் ஏன்?
இயற்கையாக, நாம்மால் செய்யப்பட வேண்டிய பணி யாது?
நம்மால் செய்யப்பட வேண்டிய வேலைகள் எதுவாக இருந்தாலும், அந்த பணிகளுக்கான அவசியம் என்ன?
நாம் ஏன் இருக்கிறோம்?
நாம் இருக்கிறோம். நமக்கான இருத்தலில் நாம் இருக்கிறோம். நாம் வாழ்கிறோம்.
நாம் ஏன் வாழ்கிறோம்? நாம் ஏன் இருக்கிறோம்? நமக்கான இருத்தல் ஏன்?
நாம் இருந்தோம் என பதிவு செய்யவே நாம் இருக்கிறோம்.
நமது இருத்தல் காற்றில் கரைந்து அழிந்து போவதற்கு.
நாம் வாழ்வது, சாவதற்கு.
நாம் வாழ்கிறோமா? அல்லது சாகிறோமா?
நம்மால் உருவாக்க பட்டது, காலம்; காலம் என்றால் என்ன?
நாம் செலவு செய்யும் காலம் நமது வாழும் காலமா? சாகும் காலமா?
கேள்விகள் கட்டுக்கடங்காது வெறுப்பேத்தினாலும்,
நமக்குள் வாழ்வதற்கான, இருத்தலுக்கான, கேள்விகளுக்கான, தேடலுக்கான, சாதலுக்கான அவசியம் இருந்து கொண்டேதானிருக்கிறது.
இது குறித்த அவசியங்களை பூர்த்தி செய்ய நாம் செய்யும் பயணம் நம் மனதினுள் எண்ணற்ற ஆசைகளை உருவாக்கி விடுகிறது.
அந்த எண்ணற்ற ஆசைகள் யாவையும் நம் இறப்பிற்கு பிந்தைய இருத்தல் குறித்தே.
சினிமா, இசை, எழுத்து, வர்ணம், ஓவியம், நடனம், அரசியல், மக்கள்.
ஆசைகள் நிறைவேற நமக்குதவியாய் நம்மால் உருவாக்கப்பட்ட ஒரே இயந்திரம், கலை.
இனிய நண்பர்களே..
பரத்தைய உலகத்தில், பைத்திய சிந்தனைகள் உருவெடுத்தபடியே இருந்தாலும், நமது சாவு ஊர்ஜிதபடுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும்,
நமது இறப்பிற்கு பிந்தைய இருப்பை அடையாது இறக்க வேண்டாம்.

4 comments:

Anonymous said...

நமது இறப்பிற்கு பிந்தைய இருப்பை அடையாது இறக்க வேண்டாம்.//
அருமை..அருமை..

அருண் பிரபு said...

நன்றி அண்ணா.. :)

sanjeev said...

:)

அருண் பிரபு said...

:) :)