MUSIK







(இந்த பக்கத்தில் என் வாழ்வியலில் அதி முக்கிய பங்கு வகிக்கும்என்னை விருப்பப்பட செய்யும் உலக இசையை தினமும் பதிவு செய்கிறேன்தங்களுக்கு அறவே பிடிக்காவிடிலும் தங்களின் நண்பர்களுடன் இப்பதிவை பகிர்ந்து கொள்ளலாம்)






இசை - 27யூன்2011:

பாடலின் பெயர்: மாடெர்ண் டைம்ஸ் (Modern Times)

ஆல்பத்தின் பெயர்: Absolute Dance Move Your Body

கலைஞனின் பெயர்: ஜொனத்தன் கொவாக்ஸ் (J-Five feat. Charlie Chaplin)

நாடு: அமெரிக்க (America)

இசை தெரிவிக்கும் கருத்து:
கலைஞனுக்கான அர்த்தத்தை தன் வாழ்வியல் செயல்பாடுகள் மூலம் முழுமைப் படுத்திய சார்லெஸ் சாப்ளினைப் போற்றுதல்.

பாடலின் சிறப்பம்சம்:
சார்லெஸ் சாப்ளின் அதி அற்புதமான குரலும், கொவாக்ஸ் அதன் துவனியின் போக்கையும் வீரியத்தையும் வேறு தளத்திற்கு அழைத்துச் செல்லும் வினோதமான இசையும்.



----------------------------------------------------------

இசை - 22 யூன் 2011:


பாடலின் பெயர்: அயிஸிகி (Ayisigi)

ஆல்பத்தின் பெயர்: The rough guide to turkish guide

கலைஞனின் பெயர்: செஸென் அக்ஸு (Sezen Aksu)

நாடு: துருக்கி (Turkey)

இசை தெரிவிக்கும் கருத்து:
நிலையாமை. அதீத எண்ணங்கள். கட்டுக்கடங்காத உணர்வுகள். காரணமற்ற வெறி.

பாடலின் சிறப்பம்சம்:
இப்பாடலின் இசை இப்பாடலிற்கான அமைப்பாக எதையுமே எடுத்துக் கொள்ள மறுக்கிறது. துக்கத்துலிருந்து மகிழ்விற்கும், மகிழ்விலிருந்து மரணத்திற்கும், மரணத்திலிருந்து கனவிற்குமாக மாறிக்கொண்டே இருக்கும் செஸெனின் குரல் அற்புதமானது.

-----------------------------------------------------------------------------------------------



இசை - 23யூன்2011:


பாடலின் பெயர்ரெக்யூம் கே.626 (Requiem K.626 Introitus)

ஆல்பத்தின் பெயர்: Amadeus - complete original set disc 3

கலைஞனின் பெயர்அமேதியஸ் (Wolfgang Amadeus Mozart)

நாடுவியன்னா (Vienna)

இசை தெரிவிக்கும் கருத்து:
மரணம்.

பாடலின் சிறப்பம்சம்:
மரணத்தின் ஒட்டு மொத்த கேள்விகளும் அலறல்களும் ஒருங்கே சேர்ந்து இசையாக வழிய தொடங்குகிறது, மொஸார்டின் ப்ரத்யேக ஆளுமையில்.

---------------------------------------------------------------------------------------------------


இசை - 22யூன்2011:

பாடலின் பெயர்சூன் கம் (Soon Come)

ஆல்பத்தின் பெயர்: பெஸ்ட் அஃப் வெய்லர்ஸ் (Best of Wailers)

கலைஞனின் பெயர்பாப் மார்லெ (Bob Marley)

நாடுஜமைகா (Jamaica)

இசை தெரிவிக்கும் கருத்து:

நம்மை தவிர வேறொருவராலும் நமது மூளையை விடுவிக்க இயலாது. அதற்கான கருவி : இசை.

பாடலின் சிறப்பம்சம்:

மூன்றாம் உலக நாடுகளின் முக்கிய இசையாக மார்லேவின் குரலை நாம் உணர முடியும். நமது இளைஞர்கள் மத்தியில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் பாப் மார்லெவும் சே குவேராவும். பாப் மார்லெவின் மனதை முழுதாக புரிந்து கொள்ள நீங்கள் இந்த பாடலின் மூலமாக ஆரம்பிக்கலாம்.



---------------------------------------------------------

இசை - 20யூன்2011:

பாடலின் பெயர்டொஸ் அல்மாஸ் (DOS ALMAS)

ஆல்பத்தின் பெயர்மி ஸுஎனோ (Mi Sueno)

கலைஞனின் பெயர்இப்ரஹிம் ஃபெரர் (IBRAHIM FERRER)

நாடுகியூபா

இசை தெரிவிக்கும் கருத்துகாதல் மற்றும் பால்யம் குறித்த நினைவுகள் 

பாடலின் சிறப்பம்சம்:
நமது பி.பி.எஸ்ஸின் குரலைக் காட்டிலும் வசீகரமானதுதனது 70வதாவது வயதில் இந்த கிழவனின் குரல் வெளிப்படுத்தும் காதல் சப்தங்கள் அற்புதமானவை.


---------------------------------------------------------------------------------


இசை - 18யூன்2011:

பாடலின் பெயர்டொனா டிஅஸ்பொரா (Dona Diaspora)

ஆல்பத்தின் பெயர்: டிஸ்கோ பர்டிஸானி (Disko Partizani)

கலைஞனின் பெயர்ஷாண்டல் (Shantel)

நாடுஜெர்மனி (Germany)

இசை தெரிவிக்கும் கருத்து:

நடனம். இசைகாதல். காமம். பயணம். நட்பு. கதறல். மரணம். நடனம். நடனம். கருவி: இசை.

பாடலின் சிறப்பம்சம்:

தெரியவில்லை. உளரல்களாக உருவெடுக்கும் இசை என்றுமே விரும்பதக்கதாக இருக்கிறது. இரவு நேரத்தில் ஜன நெருக்கடியில் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள். மனிதர்களின் வாழ்வு முழுவதுமே உளரல்களால் நிரம்பியிருக்கும் அற்புதத்தை உங்களால் உணரமுடியும்.

----------------------------------------------------------------------------------


இசை - 16யூன்2011, வியாழன்:

பாடலின் பெயர்அக்னஸ் டெய்(Agnus Dei)

ஆல்பத்தின் பெயர்: வாண்ட் டூ (Want Two)

கலைஞனின் பெயர்ருஃபுஸ் (Rufus Wainwright)

நாடுஅமெரிக்க (America)

இசை தெரிவிக்கும் கருத்து:
மர்மம். மனித வாழ்வின் அனைத்து அத்தியாயங்களும் முழுமையாக மர்மத்தின் ஊடாகவே கழிகிறது. நமது கேள்விகளுக்கு பதில் கிடைக்காது என்ற நிதர்சனத்திலும் நம்மால் கேள்விகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. வாழ்வின் அத்துனை வலிகளுக்கும் இதுவே காரணமாக இருப்பதாக தோன்றுகிறது.

பாடலின் சிறப்பம்சம்:
ஓலம். மனிதம் செத்துப்போகும் தருணங்களில் மனதினுள் தெரிக்கும் மர்மங்களை அப்பட்டமான ஓலமாக வார்த்தெடுத்திருக்கிறார் ருஃபுஸ். குரல்களும் சப்தங்களும் தேவையற்ற தருணங்களில் கணக்கற்று பெருகிக் கொண்டுருக்கும் போது, கேட்டுக் கொண்டிருக்கும் நாம் முழுவதுமாக செயலிழந்து நம்மை முழுதாக இசைக்கு அர்பணித்தாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். எளிதான சப்தங்களைக் காட்டிலும் அழுத்தமான மற்றும் கொடூரங்கள் நிறைந்த சப்தங்களே நம்மை மிகவும் பாதிக்கிறது.

------------------------------------------------------------------------------------------


இசை - 13 யூன் 2011, திங்கள்:

பாடலின் பெயர்ரேதர் பி (Rather Be)

ஆல்பத்தின் பெயர்: கர்சிலாமா (Karsilama)

கலைஞன் பெயர்ப்ரெனா மக்ரிமொன் (Brenna Maccrimmon)

நாடுதுருக்கி/கனடா (Turkey/Canada)

இசை தெரிவிக்கும் கருத்து:

உலகிலேயே மிக அலாதியான கலைகளில் இசை முதன்மையானது. இடியப்பச் சிக்கலாய் வாழ்வில் புரிபடவே போகாத மர்மங்களை வெளிப்படுத்துவதற்கு இசையை விட அற்புதங்கள் நிறைந்த கலை இருப்பதாக தெரியவில்லை.

பாடலின் சிறப்பம்சம்:

ப்ரெனா கனடா நாட்டில் நாட்டுப்புற இசை குறித்த தேடலில் துருக்கி வந்து சேர்ந்திருக்கிறார். துருக்கியின் மக்களும் இசையும் அவலை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது. உலகளவில் துருக்கியின் இசையை முனைப்புடன் அதன் உயிர் சற்றும் குறையாமல் பதிவு செய்பவர்களில் மிக முக்கியமானவர் இவள். இவரது குரல் விவரிக்க முடியாத அளவில் மர்மம் நிறைந்தது. உங்களால் வீரமாமுனிவர் போன்ற அற்புதவாதிகளை சந்திக்கும் வாய்ப்பு ப்ரெனா மூலமாக கிடைக்கலாம்.

-------------------------------------------------------------------------------------------


இசை - 9 யூன் 2011, வியாழன்:

பாடலின் பெயர்எஹ்மதோ (ehmedo)

ஆல்பத்தின் பெயர்: க்ராஸிங் தி ப்ரிட்ஜ் (Crossing the bridge:The sound of Istanbul)

கலைஞனின் பெயர்அய்நுர் டொகன் (Aynur Dogan)

நாடுதுருக்கி (Turkey)

இசை தெரிவிக்கும் கருத்து:
வாழ்வு அனைத்தையும் தாண்டியும் நகர்ந்து கொண்டேதானிருக்கிறது. ரணம் தோய்ந்த எண்ணங்களால் ஆளப்பட்ட மனதுடையவர் எவருக்கும் மிக அலாதியான பயணமாக இருக்கும் இவ்வித இசை. வருங்காலத்தில் விடியப்போகும் வசந்தம் குறித்த கனவுகளையும் உணர்வுகளையும் நிராசையுடன் வெளிப்படுத்துகிறது, இப்பாடல்.

பாடலின் சிறப்பம்சம்:
அய்நுரின் குரல். கடவுளின் மேல் நம்பிக்கையற்றவர்கள் கடவுள் என்கிற உணர்வு குறித்த புரிதல் ஏற்பட இவரின் குரலை தொடர்ந்து கேட்கலாம். தனது இசையின் வலிமைக் காரணமாக ஏகாதிபத்திய துருக்கிய அரசு, இவரது இசையை தடை செய்து வைத்திருந்தது. பெண்ணியமும் மனித நேயமும் மட்டுமே இவரது களப்பொருட்களாக தெரிகிறது. மனித பிறவிகள் சாஅவதற்கு முன் அநுபவிக்க வேண்டிய குரல், டொகனினுடையது.

----------------------------------------------------------------------



இசை - 8 யூன் 2011, புதன்:

பாடலின் பெயர்பெம்மானே (Pemmaanae)

ஆல்பத்தின் பெயர்: ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan)

கலைஞனின் பெயர்ஜி.வி.பிரகாஷ் குமார் (G V Prakash)

நாடுதமிழ் நாடு (Thamil Naadu)

இசை தெரிவிக்கும் கருத்து:
தமிழரின் இனம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுகிறது. இனத்தை சேர்ந்தோர் கடவுளிடம் அவர்களது நிலைக் குறித்து கதைக்கிறார்கள். ஈழத்து இசையின் திறன் மிக்க முதல் பதிவாக நான் இப்பாடலை உணர்கிறேன். 

பாடலின் சிறப்பம்சம்:
வக்கிரமான பல நூறு பாடல்கள் எழுதி இருப்பினும் வைரமுத்து மதிக்கத்தக்கவர், இப்பாடலினால். வார்த்தை பிரயோகம், சூஃபி தன்மையுடன் நம்மை முழுமையாக கட்டிப் போடும் ஜி.வி.யின் இசை, இதற்க்கான களத்தை யூகிக்காத வகையில் ஏற்படுத்திக் கொடுத்துள்ள செல்வராகவனின் புத்திசாலித்தனம், அதைத் தூண்டிவிட்ட ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் செயல் பாடு, என இவை அனைத்தைக் காட்டிலும் காலமறிந்து கட்டவிழ்க்கப்படிருக்கும் ஈழம் குறித்த உணர்வு தெறிப்புகளே இப்பாடலின் சிறப்பம்சம்.

-------------------------------------------------------------------------------------------



இசை - 7 யூன் 2011, செவ்வாய்:

பாடலின் பெயர்க்யுஸாஸ் க்யுஸாஸ் (Quizas Quizas)

ஆல்பத்தின் பெயர்: இன் தி மூட் ஃபார் லவ் (In the mood for love OST)

கலைஞனின் பெயர்நட் கிங் கோல் (Nat King Cole)

நாடுஅமெரிக்க (America)

இசை தெரிவிக்கும் கருத்து:
மழைக் காலத்தில் ஒரு சில மரக்கிளையின் உள் பிறந்து உண்டு இனவிருத்தி செய்து மறித்தே போகின்றன சில வகை பூச்சிகள். அவ்வாறே, பலரது காதல்களும். அவ்விதமாய், வருடியபடியே இருக்கும்  ரகசியங்கள் நம்முள் பல நேரங்களில் மறக்கப்படுகின்றன. அதை மீட்டெடுக்கும் பொழுதுகள் மிகவும் ரணம் தோய்ந்ததாகவே இருக்கிறது.(சத்தியமா, இதயம் முரளி காதலுக்கும் இதுக்கும் வித்யாசம் அதிகம்)

பாடலின் சிறப்பம்சம்:
நட் கிங் கோலின் குரல். நமது ஏ.எம்.ராஜா, பி.பி.எஸ்.ஸைப் போல. மற்றும், இசை. மனதிற்கு மிகவும் பிடித்தமான பாடல்கள் அனைத்துமே மனதினுள் காரணமற்ற வலியை உற்பத்தி செய்கின்றன. இப்பாடல் என்னுள் ஏற்படுத்தும் வலிகளுக்கான காரணங்களை தேடியே என்னின் பல பொழுதுகளை நான் தொலைக்கிறேன்.


------------------------------------------------------

இசை - 6 யூன் 2011, திங்கள்:

பாடலின் பெயர்அரிதாரத்த பூசிக் கொள்ள (aritharatha)

ஆல்பத்தின் பெயர்: அரிதாரம் (Aritharam)

கலைஞனின் பெயர்இளையராஜா (Ilayaraja)

நாடுதமிழ் நாடு (Tamilnadu, India)

இசை தெரிவிக்கும் கருத்து
இளையராஜாவை பற்றி இளையராஜா அவர்களே பாடும் பாட்டாகவே இதை நான் பார்க்கிறேன்;  ஹி ஹி..
//யாரு இல்லேன்னா?! அதுக்காக தான் இசை அவதாரமா நான் பிறந்தேன்னு பூலோகம் பாராட்டுமே..
-ராக்கூத்துல வரும் சாமி எல்லாம் நெச சாமின்னு நம்பாது ஊர் சனமே..
அட.. காசுத்தான் பேருத்தான் ஆச நான் பட்டது வேற ஏதும் சொல்ல வரல.// :)

பாடலின் சிறப்பம்சம்:
அற்புதமான குரல்கள் (இளையராஜா, ஜானகி); அனாயசமாக மனதை வருடும் இசை.


-------------------------------------------------------------------------------------------

இசை - 5 யூன் 2011, ஞாயிறு:

பாடலின் பெயர்சூப்பர் மேரியோ ப்ரோஸ் (Super Mario Bros. Theme)

ஆல்பத்தின் பெயர்: சூப்ப்ர் மேரியோ ப்ரோஸ் (Super Mario Bros - 1985)

கலைஞனின் பெயர்கொஜி கொண்டோ (Koji Kondo)

நாடுஜப்பன் (JAPAN)

இசை தெரிவிக்கும் கருத்து
வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. குஷியான விளையாடல்களும் காரணமற்ற தடங்கள்களாலும் நிறைந்த வாழ்வில் புத்துணர்வு குறைய அவசியம் இல்லை.

பாடலின் சிறப்பம்சம்:
உலகின் முக்கியமான அதி அற்புதமான வீடியோ கேம் - சூப்பர் மேரியோ ப்ரோஸ்ஸிற்காக கொஜி உருவாக்கிய இசை இன்றும் குழந்தைகளையும் பெரியவர்களையும் வியக்க வைக்கிறது. மிக எளிமையான மறக்க முடியாத இசை தொகுப்பாக இதைக் கூறலாம். சென்னையின் டிராப்பிக் மிகுத்த சிக்னலின் ஓரமாக நின்று உங்களது ஐ-பாடில் இந்த பாடலை ப்ளே செய்து பாருங்கள். உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நையாண்டி மிகுந்த அநுபவமாக அதுவே தங்கியிருக்கும்.

--------------------------------------------------------------------------








இசை - 3 யூன் 2011, வெள்ளி:

பாடலின் பெயர்ஜெ ம்'ஸூயிஸ் ஃபெய்ட் (je m'suis fait tout petit)

ஆல்பத்தின் பெயர்: புடுமயோ ஃப்ரென்ச் கஃபெ (Putumayo's French Cafe)

கலைஞனின் பெயர்ஜீஓர்ஜெஸ் ப்ரெஸ்ஸன்ஸ் (Georges Brassens)

நாடுஃப்ரெஞ்சு (France)

இசை தெரிவிக்கும் கருத்து
உளரல்கள்; நாம் எவ்வித செயலில் ஈடுபட்டாலும் நமது மனம் சம்பத்தமில்லாத வேறு சில விஷயங்களைப் பற்றி முனுமுனுத்தப்படியே இருக்கிறது. 

பாடலின் சிறப்பம்சம்:
இவரது பாடல்கள் அனைத்தையுமே இவரது குரலும் இவரது கிடாரும் மட்டுமே முன்னெடுத்தி செல்கிறது. நினைத்ததை, நினைக்க நினைப்பதை யெல்லாம் முனுமுனுக்கும் விதமே இவரது இசையின் சிறப்பம்சம். இலக்கணத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டது இசை. பிறந்த குழந்தையில் உடலசைவுகளைப் போலவே இவரது இசையும்.

----------------------------------------------------------------------------


இசை - 2 யூன் 2011, வியாழன்:

பாடலின் பெயர்:  யெகெர்மொ சூ  (Yekermo Sew)

ஆல்பத்தின் பெயர்தி ஸ்டோரி அஃப் எதியோ ஜாஸ் (New York-Addis-London: The Story of Ethio Jazz 1965-1975)

கலைஞனின் பெயர்முலட்டு அஸ்டகெ (MULATU ASTAKE)

நாடுஎதியோபிஅ (ETHIOPIA)

இசை தெரிவிக்கும் கருத்து:
உலகம் நிலையற்றது. இங்கு மனிதர்கள் மட்டுமே பைத்தியங்கள். பைத்தியத்திற்கான காரணம் அவர்களால் நிறுத்திக் கொள்ள முடியாத கேள்வியாற்றல். இதில் கசப்பான உண்மை என்னவென்றால், அவனது கேள்விக்கான பதில்கள் மறுபடியும் கேள்விகளாய் மாறுகின்றன. இவ்வித விஷேஷ சூட்ஷமங்களுடைய தண்டனைகளின் முன்பு அவன் ஏதுமற்றவன் ஆகிறான். 

பாடலின் சிறப்பம்சம்:
எதியோப்பிஅ இசையின் அடையாளமாக இருக்கிறார் முலட்டு. தனிமையில் கேட்கப்படவேண்டியவை, இவனது இசை. இவனது இசையை முழுவதுமாக பின் தொடர்பவர்கள் நல்ல மனிதர்களாக மட்டுமே இருக்க முடியும். மொழியற்று சப்தங்களின் வழி தத்துவம் பேசுகிறது முலட்டுவின் இசை.

---------------------------------------------------------------------


இசை - 1 யூன் 2011, புதன்:







பாடலின் பெயர்:  எல் டெரேசோ  (EL DERECHO)

ஆல்பத்தின் பெயர்எல் டெரேசோ டி விவிர் என் பாஸ் (El Derecho De Vivir En Pas)

கலைஞனின் பெயர்விக்டோர் ஜாரா (VICTOR JARA)

நாடுஷிலை (CHILE)

இசை தெரிவிக்கும் கருத்து

கலை மக்களுக்கானது மட்டுமேமக்கள் இசையின் பிதாவாக நான் இவனைப் பார்க்கிறேன். இவனைப் இசைக்க கூடாதென்று காலையில் சொன்னார்கள். மதியம் ஒரு பாட்டு இசைத்தான். மாலையில் 44 குண்டுகள் பாய்ந்த இவனது உடலை பிய்த்து எடுத்துக் கொண்டு ஷிலையின் தெருக்களில் கொண்டு சென்றார்கள். இரவு, ஒட்டுமொத்த ஷிலே மக்களும் இணைந்து பாடினார்கள், விக்டோரின் இசையை. சுட்டுத் தள்ள குண்டுகளற்று நிதப்தத்தில் ஆழ்ந்தது ஷிலையின் ஏகாதிபத்தியம். பல சமயங்களில் கொடுத்த காசுக்கு சரியா கூவத் தெரியாத இளையராஜாவை தெய்வமாக தொழும் மொண்ணை நண்பர்கள் விக்டர் ஜாராவை கேட்டால் பித்தம் தெளிந்து விடுவார்கள். ஏனென்றால், கலை மக்களுக்கானது.

பாடலின் சிறப்பம்சம்:
'பெயல் மணக்கும் பொழுது' எனும் தமிழின் ஆக சிறந்த கவிதை தொகுப்பின் அத்துனை த்வனியும் தோரனையும் சற்றும் குறையாமல் தெரித்தபடியே இருக்கும் விக்டோரின் குரலில். மனிதமே விக்டோர் இசையின் சிறப்பம்சம்.

--------------------------------------------------------------


இசை - 30 மே 2011, திங்கள்:

பாடலின் பெயர்:  டேங்கோ அபஸிஅநெடோ (Tango Apasinado)
ஆல்பத்தின் பெயர்தி ரஃப் டேண்ஸர் (The Rough Dancer)

கலைஞனின் பெயர்அஸ்தோர் பிஅஸோலா (Astor Piazolla)

நாடுஅர்ஜெண்டினா

இசை தெரிவிக்கும் கருத்து
கலாச்சாரம் எந்த இயற்கையான மனிதனுக்கும் புரிபடிவது இல்லை. மனிதனின் அத்துனை குழப்பங்களுக்கும் இதுவே காரணமாக இருக்க முடியும். இப்பாடல் நம்மை மிக லாவகமாக அந்த குழுப்பங்களுக்குள் பயணிக்க செய்யும்.

பாடலின் சிறப்பம்சம்:
உலகில் இதுவரைத் தோன்றிய அக்கோர்டியன் கலைஞர்களில் அஸ்தோர் நிகரற்றவர். இவரது இசையைக் கேட்கும் பொழுது ஒரே விடையை திரும்ப திரும்ப தெரிவிக்கும் சுவாரஸ்யமான கணக்கினை மிகவும் மர்மமான முறையில் மனது முனுமுனுக்க துவங்கி விடுகிறது. அஸ்தோர் பியஸோலா இசையை கருவியாக பயன்படுத்தும் மிக வலிமையான மந்திரவாதி. 

-------------------------------------------------------------------------------------------





இசை - 29 மே 2011, ஞாயிறு:


பாடலின் பெயர்:  மத்தேயூ (Matthew)

ஆல்பத்தின் பெயர்: அப்ரூட்டிங் (UPROOTING)

குழுவின் பெயர்: 

வார்ஸா வில்லேஜ் பாண்ட் (Warsaw Village Band)

நாடு: போலந்து

இசை தெரிவிக்கும் கருத்து: 

ஸ்தோத்திரம். தரித்திரம் பிடித்த கடவுளை இழிவு படித்த வேண்டி பாடப்பெறும் பாடல்.


பாடலின் சிறப்பம்சம்:

மனிதர்களின் உணர்வுகள் யாவும் மிருகங்களைக் காட்டிலும் வன்மையானவை. கட்டுக்கடன்க்காத ஆழ்மன புழுக்கங்களின் வெடிப்புகளை வார்ஸா வில்லேஜ் பாண்டின் இசையைக் காட்டிலும் அற்புதமாக பதிவு செய்ய எவராலும் முடியாது.


--------------------------------------------------------------





இசை - 28 மே 2011, சனி:


பாடலின் பெயர்:  (Everek Dagi)

ஆல்பத்தின் பெயர்: The Rough Guide to Turkish Cafe

கலைஞனின் பெயர்: க்ஹுலே  (Gulay)

நாடு: துருக்கி 

இசை தெரிவிக்கும் கருத்து: இல்லாமை நோக்கிய தேடல்.. பயணம். தோத்திரம்.

பாடலின் சிறப்பம்சம்:
நமது கே.பி.எஸ்ஸின் குரலை ஈடுகட்ட இதுவரை தமிழில் எவருமில்லை. க்ஹுலேவின் குரல் ஆயிரம் வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட ஒரு விசித்திரமான குழலின் சப்தத்தைப் போல மர்மமானதாகவும் மனிதனேயமிக்கதாகவும் இருக்கிறது.



--------------------------------------------------------------

இசை - 27 மே 2011, வெள்ளி:


பாடலின் பெயர்: யுமெஜீஸ் தீம் (YUMEJI'S THEME: in the mood for love)

ஆல்பத்தின் பெயர்: Festival de Cannes : 60 ans de festival en musique


கலைஞனின் பெயர்: ஷிகெரு உம்பெயாஷி (Shigeru Umebayashi)

நாடு: ஹாங் காங்


இசை தெரிவிக்கும் கருத்து: சொல்லப்படாத துன்பியல் அற்புதங்களாக ஒவ்வொருத்தருக்குள்ளும் உரைந்து கிடக்கும் காமமும் காதலும்.


பாடலின் சிறப்பம்சம்:
இரவு நேரத்தில் உங்களது மனம் ஒளித்து வைத்திருக்கும் காமம் சார்ந்த / காதல் சார்ந்த ரகசியங்களை இந்த இசையின் ரசவாதம் தீரா அலைகளாய்  திரித்துவிட்டபடி வருடும். மீள விடாது துன்புறுத்தும்.


--------------------------------------------------------------


இசை - 26 மே 2011, வியா ழன்:


பாடலின் பெயர்: டொஸ் க்ரடானியாஸ் (DOS GARDENIAS)

ஆல்பத்தின் பெயர்: புவன விஸ்டா ஸோஷியல் க்ளப்
(BUENA VISTA SOCIAL CLUB)

கலைஞனின் பெயர்: இப்ரஹிம் ஃபெரர் (IBRAHIM FERRER)

நாடு: கியூபா

இசை தெரிவிக்கும் கருத்து: காதல் மற்றும் பால்யம் குறித்த நினைவுகள் 


பாடலின் சிறப்பம்சம்:
நமது பி.பி.எஸ்ஸின் குரலைக் காட்டிலும் வசீகரமானது. தனது 70வதாவது வயதில் இந்த கிழவனின் குரல் வெளிப்படுத்தும் காதல் சப்தங்கள் அற்புதமானவை.



--------------------------------------------------------------

இசை - 25 மே 2011, புதன்:


பாடலின் பெயர்: 800
ஆல்பத்தின் பெயர்: 800

கலைஞனின் பெயர்: மெர்கன் டிடி(MERCAN DEDE)

நாடு: துருக்கி

இசை தெரிவிக்கும் கருத்து: மரணம் குறித்த கேள்விகள்

பாடலின் சிறப்பம்சம்:
தமிழர்கள் எவரும் இதுவரை கேட்டிராத துருக்கிய 'நே' மற்றும் 'ஸைத்தரின்' கலவை.

No comments: