KINEMA

(இப்பக்கத்தில் என்னை முழுவதுமாக வழிநடத்தும், நான் மனதார நம்பும், சினிமா மொழியின் மீதான எனது ஆளுமையை வலுப்படித்திக் கொண்டேயிருக்கும் உலகின் உன்னதமான சினிமாக்கள் பற்றி தினமும் மிக குறுகிய அறிமுகத்தை ஏற்படுத்துகிறேன். அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்)



சினிமா, இன்று (29யூன்2011)

சினிமாவின் பெயர்: (Inglorious Basterds)
இயக்குநர்டரண்டினோ (Quentin Jerome Tarantino)

நாடு: America

சிறப்பம்சம்:
டரண்டினோவின் அதிர வைக்கும் திரைக்கதையாடல்.

கதை-oneline:
ஹிட்லரின் மீதான வன்மமும் அதன் எதிர்வினைகளும், ஹிட்லரின் மரணம் குறித்த டரண்டினோவின் பார்வையும்.

------------------------------------------------------------------



சினிமா, இன்று (27யூன்2011)

சினிமாவின் பெயர்: டேன்ஸர் இன் தி டார்க் (Dancer in the Dark)
இயக்குநர்லார்ஸ் வான் றையர் (Lars Von Trier)

நாடு: Danish

சிறப்பம்சம்:
வெள்ளந்தி மனிதர்கள் மிக இயற்கையானவர்கள். அவர்களின் மூட நம்பிக்கைகளும், ஒழுங்கில்லா எண்ணங்களும் கூட அற்புதமானவை. அது உடலினுள் எதார்த்தமாக தோன்றும் நடனத்தைப் போன்றது. மூளையால் திரும்பயிசைக்க முடியாத மர்மான இசையைப் போன்றது. இது போன்ற உன்னதங்களை சினிமா மொழியின் ஊடாக வெளிப்படுத்தும் லார்ஸ்ஸின் பொறுப்புணர்வே, இத்திரைப்படத்தின் சிறப்பம்சம்.

கதை-oneline:
பதின் வயது மகனை உடைய ஏழை தாய் செல்மா. செல்மா தனக்குத் தானே ஓர் அற்புதமான ரகசியத்தை கட்டமைத்துக் கொண்டு அதனை வெற்றிகரமாக செயல் படுத்தவும் செய்கிறாள். தன் வாழ்வின் துர் பொழுதுகள் அத்துனையையும் உணரும் தருணத்தில் தன் மனதை உலகின் மிக குதூகலமான இசையுடன் ஒருங்கிணைத்து பயணிக்க துடிப்பத்தே அந்த ரகசியம். அவளது ரகசியங்களின் உன்னதமான வெளிப்பாடே இந்த சினிமா.

----------------------------------------------------------------------------------------------------


சினிமா, இன்று (23 யூன் 2011)


சினிமாவின் பெயர்: எல்லாளன் (Ellaalan)
இயக்குநர்யேசுராசா (Jesurasa)

நாடு: தமிழீழம் (THAMIZEEZHAM)

சிறப்பம்சம்:
உலக சினிமா வரலாற்றில் போராளிகளால் எடுக்கப் பட்ட சினிமாக்கள் வெகு சில. கதைகளும் புனைவுகளும் துளியும் கலக்காத உலக சினிமாக்கள் இருப்பதாக தெரியவில்லை. ஒரு திரைப்படம் எடுக்க மனிதர்கள்/போராளிகள் தங்களது உயிர்களை மாய்த்திருக்கின்றனர். மரணங்களுக்கான காரணம் எதிர்பாராத விபத்துகள் இல்லை. இதுவரை எந்த ஒரு உன்னத உலக சினிமாவிலும் நாம் காண கிடைக்காத உண்மைகளால் அழுத்திகிறது, எல்லாளன். 

கதை-oneline:
சிறீலங்க அரசின் அனுராதபுரம் வான் படை தளத்தை முற்றிலுமாக அழிக்கின்றனர், விடுதலை புலிகளின் 21 சிறப்பு கரும் புலிகள். மரணம் குறிக்கப்பட்டு இலக்கை சென்றடையும் 21 சாதாரண மனிதர்களின் உணர்வுகளும், மனித நேயமும், கனவுகளுமே இப்படம். 



--------------------------------------------------------------

சினிமா, இன்று (20யூன்2011)

சினிமாவின் பெயர்: பை (Pi)
இயக்குநர்டார்ரென் (Darren Aronofsky)

நாடு: அமெரிக்க 

சிறப்பம்சம்:
டார்ரெனின் சினிமா மொழி. சில நேரங்களில் நமது மூலையில் ஊற்றெடுக்கும் காட்சிகளின் வேகம் மிக அதீதமானது. கட்டுக்காடங்காது பொங்கி, நிரம்பி வழிகின்றன காரணமற்ற காட்சிகள். நமது மூலை போதையில் திளைக்கும் தருணங்களில் இது பல நூறு மடங்காக அதிகரிக்கிறது. நமது மூலையின் வீரியத்திற்கு முன்பு நாம் செயலற்றவர்களாகிறோம். இதை சினிமாவைக் காட்டிலும் எளிமையாக புரிய வைக்க வேறெந்த கலையினாலும் முடியாது என தோன்றுகிறது. டார்ரெனின் சினிமா மொழி அதன் தார்மீக பொறுப்புணர்ன்து செயல் படுகிறது.

கதை-oneline:
உலகத்தின் அனைத்து செயல்களும் கனிதத்தின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. அனைத்து செயல்பாடுகளுக்கு பின்னும் ஒரு கனித மொழி எத்தனித்துக் கொண்டிருக்கிறது. உலகின் அதுனை பிரச்சனைகளுக்கும் தீர்வாக ஒரு 264 இலக்க எண் இருக்கிறது. அதன் தேடலில் வாழ்வை முழுவதுமாக தொலைக்கிறான் கதாநாயகன்.

----------------------------------------------------------------------------------------------------------------


சினிமா, இன்று (18யூன்2011)
சினிமாவின் பெயர்: ரெஃயூஎம் ஃபார் எ றீம் (Requiem for a dream)
இயக்குநர்டார்ரென் (Darren Aronofsky)

நாடு: அமெரிக்க

சிறப்பம்சம்:
டார்ரெனின் சினிமா மொழி. சில நேரங்களில் நமது மூலையில் ஊற்றெடுக்கும் காட்சிகளின் வேகம் மிக அதீதமானது. கட்டுக்காடங்காது பொங்கி, நிரம்பி வழிகின்றன காரணமற்ற காட்சிகள். நமது மூலை போதையில் திளைக்கும் தருணங்களில் இது பல நூறு மடங்காக அதிகரிக்கிறது. நமது மூலையில் வீரியத்திற்கு முன்பு நாம் செயலற்றவர்களாகிறோம். இதை சினிமாவைக் காட்டிலும் எளிமையாக புரிய வைக்க வேறெந்த கலையினாலும் முடியாது என தோன்றுகிறது. டார்ரெனின் சினிமா மொழி அதன் தார்மீக பொறுப்புணர்ன்து செயல் படுகிறது.

கதை-oneline:
மனித வாழ்வில் நம்மால் புலபடுத்த முடியா எண்ணங்கள் நமை வாட்டும் பொழுதுகளில் நாம் நமது மூலையை வேறு ஒரு தளத்திற்கு அழைத்து செல்ல விருப்பப்படுகிறோம். கருவி: போதைப் பொருட்கள். நாளடைவில் அதுவே வாழ்வியலாகவும் மாறத் தொடங்குகிறது. காரணமற்ற இவ்வாழ்வில், காரணமின்றி/பொய்யான காரணங்களுக்காக போதையில் திளைக்கும் ஒரு மகன்; ஒரு தாய்; ஒரு காதலி; ஒரு தோழன். இவர்களிடம் மிச்சமிருக்கும் வாழ்வு குறித்த பயங்களும், அற்புதமற்ற வலிகளும் இவர்களை முழுமையாக வாட்டி எடுக்கிறது. நம்மையும் கூட.

---------------------------------------------------------------------------------------------


சினிமா, இன்று (16யூன்2011)

சினிமாவின் பெயர்: லிபெரோ (Libero-Along the Ridge)
இயக்குநர்கிம் ரொஸி ஸ்டூஅர்ட் (Kim Rossi Stuart)

நாடு: இட்டலி (Italy)

சிறப்பம்சம்:
நடிகர் கிம் ரொஸி இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படம். அவரது சினிமா மொழி மிகவும் அந்தரங்கமானதாக நம்முடன் நம்முள் புகுந்து கொள்கிறது. கதாப்பாத்திரங்களின் உளவியலை பார்வையாளர்களிடத்தில் நிரப்புவது நுன்மையான திறனாகவே தோன்றுகிறது; அதை அப்பட்டமாகவும், கீஸ்லோவ்ஸ்கியைப் போன்று வலிமையாகவும் பதிவு செய்கிறார், கிம் ரொஸி.

கதை-oneline:
டாமி பதினொரு வயது சிறுவன். உலகின் மிக இளமையான உன்னதமான தந்தையையும், மர்மமான, அவ்வப்போது காணாமல் போகும் தாயையும் (சித்தி), வயதின் கட்டுப்பாட்டில் இயங்கும் அக்காவையும், தீராத தனிமையையும் கொண்ட அவனது வாழ்வின்  அற்புதமான சினிமா குறிப்புகளே, இப்படம். 

----------------------------------------------------------------------------------


சினிமா, இன்று (11யூன்2011, சனி)

சினிமாவின் பெயர்: ஃபேட்லெஸ் (Fateless)
இயக்குநர்லஜொஸ் கொல்டாய் (Lajos Koltai)

நாடு: ஹங்கரி (Hungary)

சிறப்பம்சம்:
இச்சினிமாவின் முக்கிய இடங்களில் இடம் பெறும் நிசப்தங்களே, இப்படத்தின் சிறப்பம்சம். ஒரு படைப்பு சொல்லவிட்ட / மறைவு கதைகளாக வெளிப்படுத்தும் கதைகளே அப்படைப்பின் உன்னதத்திற்கு காரணமாக இருக்கிறது. நமது மனதினுள் நமக்கு புலப்படாத நினைவுகளும், எண்ணங்களுமே நம்மை முழுமையாக வழி நடத்துகிறது. அது போல, இந்த படத்தில் வரும் காதாபாத்திரங்கள் வெளிப்படுத்தாத எண்ணங்களும், சொல்லாத வார்த்தைகளும் காணாத விஷயங்களும், நினைத்து பார்க்காத நினைவுகளுமே, இப்படத்தை நாம் பார்த்து முடித்தப்பின் நம்மை முழுவதுமாக கட்டிப்போடும் விஷயங்களாக இருக்கும்.

கதை-oneline:
இரண்டாம் உலகப் போர்: ஹிட்லரின் முகாமில் வாழ முற்படும் ஒரு சிறுவனின் எண்ணங்களும் கனவுகளும் எதார்த்தங்களும் போராட்டமுமே கதைக் களம்.

----------------------------------------------------------


சினிமா, இன்று (9யூன்2011, வியாழன்)
சினிமாவின் பெயர்: டொவ்ட் வ பியன் (Tout va bien)
இயக்குநர்கோடார்ட், கோரின் (Jen luc godard, Jean pierre gorin)

நாடு: ஃப்ரெஞ் (French)

சிறப்பம்சம்:

 சினிமா மொழிக்கான அத்துனை இலக்கணங்களையும் தேடி கண்டுபிடித்து அவற்றை மிகவும் சோதனைக்குள்ளாக்கும் கோடார்டின் திரைக்கதையாடலும் சினிமாமொழியுமே இச்சினிமாவின் சிறப்பம்சம். ஒரு கலைஞனுக்கு தன்னை சுற்றிலும் இருக்கும் மனிதர்களுக்கான கலையை உருவாக்கம் செய்வதில் இருக்கும் அவசியத்தை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது. இதுவரை தமிழ் சினிமாவை விமர்சனம் செய்யும் விதமாக தோலுரிக்கும் சினிமாக்கள் இதுவரை யாரும் செய்யவில்லை. தமிழ் சினிமாவை உற்று நோக்கி அதன் மீது தீவிர அதிருப்த்தி உங்களுக்கு இருக்குமேயானால் நீங்கள் இப்படத்தைப் பார்த்தே ஆக வேண்டும். 

கதை-oneline:

கோடார்ட் ஃப்ரெஞ்சு மக்களின் சினிமா, அரசியல், புரட்சி, உறவுகள் பற்றிய தன்னுடைய மதிப்பீடுகளையும் கனவுகளையும் விமர்சனங்களையும் ஒரு காதல் ஜோடியின் வாழ்வியலின் ஊடாக பதிவு செய்கிறார். மற்றொரு கோணத்தில் இப்படத்தினை உலகின் மாறுபட்ட வினோதமான காதல் கதையாக கூறலாம்.

-------------------------------------------------------------------------------------


சினிமா, இன்று (8யூன்2011, புதன்)

சினிமாவின் பெயர்: டு த ரைட் திங் (Do The Right Thing)
இயக்குநர்ஸ்பைக் லீ (Spike Lee)

நாடு: அமெரிக்க (America)

சிறப்பம்சம்
ஸ்பைக் லீயின் அனைத்து திரைப்படங்களுமே புரட்சியின் அவசியத்தை மிக அழுத்தமாக ப்திவு செய்கிறது. அவரது சினிமா மொழி சயத்தை இழந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அவசிய விருந்து.

கதை-oneline:
புரட்சிக்கான முதல் குரல்கள், முதல் கலகம், அதற்கான அதி பயங்கர அவசியம் பற்றியதே, இப்படம். வரலாற்றில் வாழ்தல் என்பது வரலாற்றில் கல் எறிதல் என்பதே. இதை அப்பட்டமாக வெளிப்படித்தும் திரைக்கதை. கருப்பினத்தவர்கள் வாழும் பகுதி ஒரு நாள் நிகழ்வே கதை. இன அடையாளத்தை இழந்துவரும் மனிதர்கள்.. சிறு சிறு அரசியல்கள், கலகத்திற்கு முந்தைய நிகழ்வுகள், அரசியல்கள், பொய்கள், கனவுகள், வாழ்வியல் எதார்த்தங்கள் என கதையின் சாராம்சமே அற்புதமானது.



-------------------------------------------------------------------------------------------------


சினிமா, இன்று (7யூன்2011, செவ்வாய்)

சினிமாவின் பெயர்: (The Scent of Green Papaya)
இயக்குநர்: (Anh Hung Tran)

நாடு: வியெட்னம்

சிறப்பம்சம்:
திரை மொழி மிகவும் அந்தரங்கமானது. றானின் அனைத்து சினிமாக்களுமே மிகவும் அந்தரங்கமாக எனது மனதில் தங்குகிறது. சிறுப் பொருட்கள் மீது, பழங்கள் மீது, இலைகள் மீது, எறும்புகள் மீது சிறுவனாய் நான் கொண்டிருந்த உறவு காமம் சார்ந்த உச்சகட்ட உணர்வுகளைக் காட்டிலும் அடர்த்தியானது. அதை இவ்வுளவு அப்பட்டமாக சினிமாவாக இப்படத்தில் முன்னிறுத்தி இருக்கிறார் றான். அற்புதங்களால் நிரம்பப்பெற்ற சினிமா மொழியாடல் றானினுடையது.

கதை-oneline:
மியூ தனது பத்து வயதில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர்கிறாள். அமைதியானவள். அவளது உறவு முழுவதுமாக இயற்கையுடனானது. பப்பாளிக் காயின் உள் இருக்கும் சின்னஞ்சிறிய விதைகளுக்கும் அவளுக்குமான உறவு அலாதியானது. தனது இருபதாவது வயதில் தன் எஜமானனிற்கும் அவளுக்கும் காதல் மலர்கிறது.

-------------------------------------------------------------------------------------------------


சினிமா, இன்று (6 யூன் 2011, திங்கள்)
சினிமாவின் பெயர்: இட்ஸ் கைண்ட் அஃப் அ ஃபன்னி ஸ்டோரி (It's kind of a funny story)
இயக்குநர்அன்னா பொடென் & ரியான் ஃப்ளெக் (Anna Boden & Ryan Fleck)

நாடு: அமெரிக்க (!!!!) (America)

சிறப்பம்சம்

மிக சாதாரணமாக எடுக்கப் பட்ட விதம். கதாப்பாத்திரங்களும் நடிகர்களும். எளிமையான திரைக்கதையாடல்.

கதை-oneline:

ஒரு இளைஞன் தன்னால் கட்டுப்படுத்த முடியாத தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டு மன நல காப்பகத்தில் சேர்கிறான். அங்கு இவனுக்கு அப்பாற்பட்ட மன நிலையில் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கும் மனம் பிழற்ந்த மனிதர்களுடன் பழகத் துவங்குகிறான். வாழ்வது சுவாரஸ்யமாகிறது.

---------------------------------------------------------------------------

சினிமா, இன்று (5 யூன் 2011, ஞாயிறு)
சினிமாவின் பெயர்: தி விண்ட் வில் கேரி அஸ் (The Wind Will Carry Us)
இயக்குநர்அப்பாஸ் கெய்ராஸ்தாமி (Abbas Kairostami)

நாடு: ஈரான் (Iran)

சிறப்பம்சம்:
கோடிகோடியாய் பிறந்து வாழ்ந்து செத்துப்போகும் மனிதர்களுக்கான அவசிய எளிய தத்துவங்களை எதார்த்தங்கள் களையாமல் அப்பாஸ் கெய்ராஸ்தாமி விவரிக்கும் விதமே இப்படத்தின் சிறப்பம்சம். 

கதை-oneline:
நகரத்திலிருந்து கிராமத்திற்கு வருகிறான் ஒரு பொறியாளன். கிராம மக்களின் வாழ்வியலும் தத்துவங்களும் அவனுள் மாற்றங்களை ஏற்படுத்துகிறது; நமக்குள்ளும்.



------------------------------------------------------------------



சினிமா, இன்று (3 யூன் 2011-வெள்ளி)
சினிமாவின் பெயர்: ஹேப்பி டுகெதர் (HAPPY TOGETHER)
இயக்குநர்: வாங் கார் வாய் (WONG KAR WAI)

நாடு: ஹாங் கொங் (HONG KONG)

சிறப்பம்சம்:
வாங் கார் வாயின் சினிமா மொழியும் அவரது திரைக்கதையாடலும் மிக உணர்வுப்பூர்வமானது. இவரது திரைக்கதையில் இவர் ஆளும் மௌனங்களும் இசைக் காட்சிகளும் மட்டுமே காதல் பற்றி இதுவரை எடுக்கப்பட்ட சினிமா காட்சிகளைக் காட்டிலும் முக்கியமானதாக கருதுகிறேன்.

கதை-oneline:
அர்ஜெண்டினா. இரு ஆண்கள். இருவரும் காதலர்கள். ஓரின சேர்க்கையை கதையாக கொண்ட எந்த திரைப்படமும் இப்படம் அளவிற்கு சிறப்பாக இருந்ததில்லை.

-------------------------------------------------------------------------
சினிமா, இன்று (2 யூன் 2011-வியாழன்)
சினிமாவின் பெயர்: ஆஃப் தி மேப் (OFF THE MAP - 2003)

இயக்குநர்: கேம்பெல் ஸ்காட் (CAMBELL SCOTT)


நாடு: அஸ்திரேலியா (AUSTRALIA)


சிறப்பம்சம்:

மிக சாதாரணமான சினிமா மொழி. சிறுமி வேலண்டினா டி அஞ்செலிஸின் ஒப்பற்ற நடிப்பு. 'அன்னை'யில் பானுமதியின் நடிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த படம் உங்களுக்கு நல்ல விருந்து.

கதை-oneline:

அப்பன் முடமாகி போகிறான். 11 வயது சிறுமி குடும்ப தலைவியாகிறாள். நமது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படங்களில் கையாளப்படும் உறவுகளின் உன்னதமும், உணர்வுகளின் பிரதிபளிப்பும், எதிர்பாரா குடும்ப சூழலும் அப்பட்டமாக வெளிப்படுகிறது, இத்திரைக்கதையாடலில்.

-------------------------------------------------------------------------------

சினிமா, இன்று (1 யூன் 2011-புதன்)
சினிமாவின் பெயர்: தி பேட்டில் அஃப் அல்ஜீயர்ஸ் (The Battle of Algiers - 1966)

இயக்குநர்: கில்லோ பொண்டெகார்வோ (Gillo Pontecorvo)

நாடு: அல்ஜீரிய-இத்தாலிய-ஃப்ரென்சு (ALGERIA - ITALY - FRANCE)

சிறப்பம்சம்:
உலகில் இதுவரை செய்யப்பட்டதிலேயே மிகவும் சிறந்த படத்தினை சொல் என என்னிடம் யார் கேட்டாலும், எனது ஒரே பதில், 'தி பேட்டில் அஃப் அல்ஜீயர்ஸ்'. நிதர்சனமும், புரட்சியின் வெளிப்பாட்டு விதமும் மட்டுமே, இப்படத்தின் சிறப்பம்சம்.

கதை-oneline:
அல்ஜீரிய மக்களின் விடுதலை போராட்டம். இழப்பும், வசந்தமும்.


------------------------------------------------


சினிமா, இன்று (30மே2011-திங்கள்)

சினிமாவின் பெயர்: ம் ஜூலி (In July - 2000)

இயக்குநர்: ஃபதி அகின் (FATIH AKIN)

நாடு: துருக்கி

சிறப்பம்சம்:

உலக சினிமாவின் தற்போதைய ஆளுமையாளர்களில் நான் ஃபதி அகினை மிகவும் சக்தி வாய்ந்தவராகப் பார்க்கிறேன். இவரது படங்கள் மாபெரும் புனைவுகள். இப்புனைவுகள் யாவையும் துருக்கிய இசைப் பற்றியும், துருக்கிய மனிதர்களைப் பற்றியும் உன்னதமாக பதிவு செய்கிறது. வாழ்தல் குறித்த மிக அழகிய குறிப்புகளை வெளிப்படுத்தும் இவரது படங்கள், மனிதனின் வாழ்வியல் அவசியங்களான காமம், இசை, உணவு, கலை, அன்பு குறித்த எழுச்சி மிக்க கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. ஃபதி அகினின் சினிமா மொழியே இப்படத்தின் சிறப்பம்சம்.

கதை-oneline:

ஒரு ஹீரோ. ஒரு ஹீரோயின். காரில் பயணம் செய்கிறார்கள். (சத்தியமாக லிங்குசாமியின் 'பையா'வை விட நல்ல படம்)


-----------------------------------------------------------------------


சினிமா, இன்று (29மே2011-ஞாயிறு)





















சினிமாவின் பெயர்:  மிஸ்றர். ஹுலட்'ஸ் ஹாலிடே (Mr. Hulot's Holiday - 1953)


இயக்குநர்ஜக்யூஸ் டடி (JACQUES TATI)

நாடு: ஃப்ரென்ச்

சிறப்பம்சம்:

மனிதர்கள் மிகவும் பொய்யானவர்கள். அவர்களது ஒவ்வொரு செயல்பாடுகளும் அவர்களது பொய்களையே வலியுறுத்துகின்றன. அவர்களது பொய்களே அவர்களுக்குள் குழப்பங்களை தொற்றுவிக்கிறது. இது குழப்பங்கள் பற்றிய படம். டடி யின் இந்த சினிமா அவரை சார்லெஸ் சாப்ளினுக்கு இணையான நையாண்டி இயக்குநராக வெளிப்படுத்துகிறது. 

கதை-oneline:

ஹூலட். கதையின் மைய பாத்திரமான இவன் தனது விடுமுறையைக் கொண்டாட ஓர் கடற்கரை விடுதியில் தங்குகிறான். அவனை சுற்றிய மனிதர்கள், குழப்பங்கள், முற்றிலும் தவறான தெளிவுகள், எனினும் புரிபடாத நாகரீகம்... ஸ்ஸ்ஸப்பாபா.. நகைச்சுவை உணர்வின் உச்சம், இத்திரைப்படம்.


-----------------------------------------------------------------------


சினிமா, இன்று (28மே2011-சனி)






















சினிமாவின் பெயர்:  டவுன் பை லா (DOWN BY LAW-1986)

இயக்குநர்: ஜிம் ஜார்முஷ் (JIM JARMUSCH)

நாடு: அமெரிக்க

சிறப்பம்சம்:

ஹாலிவுட்டின் புளித்து போன திரைக்கதையாடலிலிருந்து தங்களுக்கென தனி சினிமா மொழி ஆளுமையைக் கொண்டிருக்கும் ஹாலிவுட் இயக்குநர்களில் நம்பர்.1 : ஜிம் ஜார்முஷ். இவரது திரைக்கதையாடல், இசையை கையாண்ட விதம், வசனம் - இவை அனைத்தும் படத்தின் தத்துவத்தை பிரதிபளிக்க மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது

கதை-oneline:

மூன்று வெவ்வேறு சமூக நிலையைக் கொண்ட இளைஞர்கள் லௌஸியானா சிறையில் வெவ்வேறு குற்றங்களுக்காக ஒரே அறையில் தங்கவைக்கப் படுகிறார்கள். முன் பின் அறிமுகமற்ற மூன்று தனி மனிதர்கள் சிறையிலிருந்து தப்பித்து பயணிக்க தொடங்குகிறார்கள். நான் இதுவரைப் பார்த்த படங்களிலேயே அதி அற்புதமான பயணக் காவியமாக உணர்வது, டவுன் பை லா.


-----------------------------------------------------------------------


சினிமா, இன்று (27மே2011-வெள்ளி)


சினிமாவின் பெயர்:  மஸ்குலின் ஃபெமினின் (MASCULIN FEMININ-1966)

இயக்குநர்: ழான் லக் கோடார்ட் (JEAN-LUC-GODARD)

நாடு: ஃப்ரென்ச்

சிறப்பம்சம்:

எனது தார்மீக ஆசான்களில் முக்கியமானவரான கோடார்டின் படங்களிலேயே மிகவும் சுவாரஸ்யமான சினிமா இது. சினிமா மொழிக்கான அத்துனை இலக்கணங்களையும் தேடி கண்டுபிடித்து அவற்றை மிகவும் சோதனைக்குள்ளாக்கும் கோடார்டின் திரைக்கதையாடலும் சினிமாமொழியுமே இச்சினிமாவின் சிறப்பம்சம்.

கதை-oneline:

ஃப்ரான்ஸ். ஆண். பெண். காமம். களவு. மக்கள். எண்ணம். புரட்சி. சண்டை. இசை. நடனம். உறவு. இளமை. கோடார்டின் சினிமாக்கள் கதையைக் கொண்டு இயங்குபவையன்று. தத்துவங்கள், மனிதர்கள், கலை இடையேயான அவரது எண்ணங்கள் யாவையுமே அவரது கதை.



-----------------------------------------------------------------------------------------------

சினிமா, இன்று (26மே2011-வியாழன்)




சினிமாவின் பெயர்:  டர்டில்ஸ் கேன் ஃப்ளை (TURTLES CAN FLY)

இயக்குநர்: பஹ்மன் கொபாடி (BAHMAN GHOBADI)

நாடு: குர்திஸ்தான் 

சிறப்பம்சம்:

துருக்கிய இராக்கிய எல்லை கிராமங்களில் போர் கால சூழலின் விளைவாய் நாசமாகிய குழந்தைகளின் வாழ்வியலை தனது தார்மீக பொறுப்புணர்ந்து பதிவு செய்த பஹ்மன் கொபாடியின் எண்ணங்களும் அவரது சினிமா மொழியும்.  

கதை-oneline:

துருக்கிய இராக்கிய எல்லை கிராமத்து சிறுவர்களின் போர் கால வாழ்க்கையின் அப்பட்டமான பதிவு.


-----------------------------------------------------------------------------------------------

சினிமா, இன்று (25மே2011-புதன்)



சினிமாவின் பெயர்: தி பன்ட்ஸ் விஸிட் (the band's visit)

இயக்குநர்: இரான் கொலிரின் (Eran Kolirin)

நாடு: இஸ்ரேல்

சிறப்பம்சம்:


மிக சாதாரணமான கதையை, அற்புதமான நிசப்தங்களாலும் இசையினாலும் மெருகேற்றி, காமம், உறவுகள், இசை, காதல், பயணம் குறித்த மனிதம் நிறையும் தேடலூட்டும் திரைக்கதையாடல்.

கதை-oneline:

8 பேரைக் கொண்ட எகிப்திய காவல் துறையைச் சேர்ந்த ஒரு இசைக் குழு இஸ்ரேலில் ஒரு சிறிய கிராமத்தில் இசை நிகழ்ச்சி நடத்த சென்று, தேடி வந்த கிராமத்தை தொலைத்து விடுகிறார்கள். இசை அவர்களை வழி நடத்துகிறது.

No comments: