BOOK


புத்தகம், இந்த வாரம் (15 யூன் 2011):

புத்தகத்தின் பெயர்: ஏழாவது அறிவு (கட்டுரைகள்)

எழுத்தாளர்: வெ. இறையன்பு 

சிறப்பம்சம்:
உலகின் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் அநுபவத்தில் இக்கால மனிதர்களே மிகவும் வினோதமான ஜீவராசியாக இருக்க முடியும். இவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளும், இடர்பாடுகளும், குழப்பங்களும் வேறு எந்த உயிரினங்களுக்கும் இருந்ததில்லை. கம்யூட்டரின் முன் ஃபேஸ் புக்கின் வாயிலாக வாழ்கிறோம். நமக்கு மட்டுமே இவ்வுளவு குழப்பங்கள். நாம் மட்டுமே ஈஷா யோகாவில் சேர்கிறோம். நீங்க யாராவது இந்த யோகா வகுப்புக்கெல்லாம் போயிருக்கீங்களா?! ஈஷா மாதிரியான எல்லா வணிகர்களின் சாராம்சமும் ஒன்று மட்டுமே: வாழ்வது எப்படி? 

உலகிலேயே சிரிப்பது, உண்பது, தூங்குவது, சும்மா இருப்பது, பார்ப்பது, மூச்சு விடுவது - இதுக்கெல்லாம் பணம் கொடுத்து பயிற்சிக்கு போற முட்டாள்கள் நாமாகவே இருக்க முடியும். வேறு எந்த உயிரினமும் சும்மா இருப்பது எப்படி? என்பதற்காக 6375/- ரூபாய் செலவு செய்வதில்லை.

அவ்வுளவு குழப்பம். வாழ்க்கையை வாழ தெரியாதவர்களாக நாம் நம்மை மாற்றிக் கொண்டுள்ளோம். கேள்வி எழுப்புதல் என்பதே நமது இருத்தலின் நிலைபாடென்பதை நாம் மறக்க விரும்புகிறோம். உணர்தல் நம்மிடம் இல்லாமல் போவதற்கான அத்தனை முயற்சியிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். கிட்டதட்ட, நாம் எதையுமே உணருவதில்லை. இயற்கையான பொழுதுகள் நம்மிடையே அழிந்த படியே வருகிறது. இயற்கையாக கேள்விகள் ஊற்றெடுப்பதே இல்லை என்பதால், நாம் குழப்பங்களுக்குள் வாழ்கிறோம்/சாகிறோம். சுயத்தை பற்றி எவ்வித கவலையும் நமக்கு இருப்பதாக தெரியவில்லை. நம்மை சுய நலம் சார்ந்தவர்களாக காட்டிக்கொண்டால் நம்மை சமூகம் அசிங்கமாகப் பார்க்கும் நிலை இருப்பதாக நினைத்து குழப்பிக்கொள்கிறோம். 

குழப்பங்கள் அதீதமாகும் போது, நாம் ஏதுமற்றவர்களாய் மாற முற்பட்டு, வேறொருவர் சொல்லை முழுவதுமாக பின்பற்ற தொடங்குகிறோம். அதை கேள்விக் கேட்பதும் இல்லை. சிறு வயதிலிருந்தே நாம் அதற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்கிறோம். கும்பிடுன்னா கும்பிடுறோம். வணக்கம்வைன்னா வணக்கம் வைக்கிறோம். சிரின்னா சிரிக்குறோம். தூங்குன்னா தூங்குறோம். எழுந்திரின்னா எழுந்திரிக்கிறோம். படின்னா படிக்கிறோம். றோம். றோம். றோம். றோம். றோம். றோம்.றோம். றோம். றோம். றோம். றோம். றோம். சுயமும் போச்சு; மரியாதையும் போச்சு. 

இறையன்புவின் இப்புத்தகம் ஒன்னும் அற்புதமான புத்தகம் இல்லை. நீட்சே, ஃப்ராய்ட், லக்கான், யூங், லா ஓட்சு போன்றோரின் எண்ணங்கள் அளவிற்கு தெளிவானதாக இப்புத்தகத்தில் எதுவுமே இல்லை. இருப்பினும், இறையன்பு அவர்களின் பகிர்தல், அவர் படித்த விசயங்களின் பதிவு, சுவாரஸ்யமான வாழ்வியல் கேள்விகள் உருவாகும் கதைகள் என இப்புத்தகத்தில் பல விறு விறுப்பான எண்ணங்கள் இருக்கவே செய்கிறது.

--------------------------------------------------------------------------

புத்தகம், இந்த வாரம் (31 மே 2011):


புத்தகத்தின் பெயர்: உள்ளிருந்து சில குரல்கள் - (நாவல்)

எழுத்தாளர் : அமரர். கோபி கிருஷ்ணன் 
(தயவு செய்து கோபி கிருஷ்ணன் பற்றிய இந்த வலை குறிப்புகளை படிக்க தவறாதே!!!)

சிறப்பம்சம்:
இந்நாவலின் வடிவம். நாவலுக்குரிய அமைப்பு அற்ற அமைப்பு. நிதர்சனம். ஒப்பற்ற நைய்யாண்டித்தனம். சமூகம், கலாச்சாரம், நாகரீகம், மதம், கடவுள், காதல், உறவு, கலியாணம் என இயற்கையற்ற மனித கண்டுபிடிப்புகளை அமரர். கோபி கிண்டல் செய்யும் விதம்.

கதை - One line:
ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகிவிடுவதைப் போலன்று மனிதர்கள். அவர்கள் ஏதுமற்றதிலிருந்து உருவெடுத்தவர்கள் என்பதை நன்கறிந்து அழிபவர்கள். அவர்களது கேள்விகள் நொந்துபோவதேயில்லை. அவர்கள் அவர்களது மந்தையை உணர்ந்தாலும் அதிலிருந்து முழுவதுமாக விலக கற்றுக் கொள்ளாதவர்கள். சிலர் மந்தையிலிருந்து விலகி மனநல காப்பகங்களில். மீதமுள்ளோர் வெளியில். அந்த சிலரின் மொழி அந்த மீதமுள்ளோருக்கு பயத்தையும் சிரிப்பையும் உண்டு பன்னுகிறது.

------------------------------------------------------

புத்தகம், இந்த வாரம்:

(25மே2011)

புத்தகத்தின் பெயர்: இஷ்மயில் (ISHMAEL) - நாவல்

எழுத்தாளர்: டேனியல் க்குயின் (DANIEL QUINN)

மொழி: ஆங்கிலம்



சிறப்பம்சம்:
உலகின் அத்துனை பிரச்சனைகளுக்குமான காரணங்கள் குறித்த கேள்விகளை தெளிவாக உணர வைத்து, (சத்தியமாக) அது குறித்த தேடலின் வீரியத்தையும் விரிவுபடுத்தும்.

கதை - oneline:
உலகத்தை காப்பாற்ற நினைக்கும் ஒரு சராசரி மனிதனை இஷ்மயில் எனும் மனித குரங்கு மாணவனாக்கிக் கொள்கிறது...

பி.கு: இப்புத்தகத்தின் இலவச பிரதியை பெற்றுக் கொள்ள எனை தொடர்பு கொள்ளவும்.


No comments: